வலைபதிவு / Blog என்றால் என்ன அதை தொடங்குவது எப்படி?

இது என்னுடைய முதல் பதிவு ஏதேனும் எழுத்து பிழை இருந்தால் தெரியபடுத்தவும் சரி பதிவிற்கு வருகிறேன்.

சிலருக்கு கதை எழுதும் பழக்கம் இருக்கும், சிலருக்கு நன்கு கவிதை எழுத தெரியும் மற்றும் நமக்கு இருக்கும் திறமைகளையும் தெரிந்த பல விஷயங்களையும் நமக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் உலகில் உள்ள  அனைவரிடமும் பகிர்த்துகொள்ள உதவுவதுதான் வலைபதிவு / Blog என்கிறோம்.

அந்த சேவையை பல நிறுவனங்கள் வழங்கினாலும் உலகின் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகிள் Blogger என்ற பெயரில் நமக்கு இலவசமாக வழங்குகிறது.  சரி வலைபதிவு தொடங்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

Step 1

  1. முதலில்  WWW.BLOGGER.COM க்கு செல்லுங்கள்.
  2. SIGN IN  பட்டன் அழுத்துங்கள்

Step 2


  உங்களுடைய Gmail Account பயன்படுத்தி Blogger ல் இனைய முடியும்.

  1. உங்களுடைய Gmail முகவரியை உள்ளிடவும் பிறகு.
  2. NEXT பட்டன் அழுத்தி அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் Password உள்ளிட்டு NEXT பட்டன் அழுத்தவும்.

Step 3


CREATE NEW BLOG பட்டன்அழுத்தவும்

Step 4


  1. உங்கள் Blog ன் தலைப்பு உள்ளிடவும்.
  2. உங்கள் Blog ன் முகவரியை தேர்ந்தெடுத்து தெரிவுசெய்யவும்.  தேர்வுசெயும்போது  வலது பக்கத்தில் நீல வண்ணத்தில் டிக் மார்க் வரவேண்டும்.  மாறாக ஆரஞ்சு வண்ணத்தில் வந்தால் முன்பே வேறொருவரால் அந்த முகவரி பெறப்பட்டதாக அர்த்தம்.
  3. உங்கள் Blog ன் தோற்றம் எப்படி இருக்கவேண்டும் என்று விருப்பமோ அதற்கேற்றார் போல உங்கள் THEME ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  4. Create blog பட்டன் அழுத்தவும்.

Step 5உங்கள் Blog தயார் ஆகிவிட்டது.  Blog ஐ பார்க்க View blog பட்டன் அழுத்தவும்.  புதிய TAB ல் உங்கள் Blog திறக்கும். 


| Leave a Comment |

Recommended Post to Read :

No comments :

Post a Comment