வலைபதிவில் தமிழை செயல்படுத்தி / பயன்படுத்துவது எப்படி?

முந்தய பதிவில் வலைபதிவு தொடங்குவது எப்படி என்பதை பார்த்தோம்.   அதை படிக்க இங்கே செல்லவும் .

ஆங்கிலத்தில் பதிவு எழுதுவதென்றால் நேரடியாக தட்டச்சு செய்து அப்படியே பதிவேற்றிவிடலாம்.

ஆனால் தமிழ்  தட்டச்சு சிறிது சிரமமாகவே இருக்கும், தமிழ் தட்டச்சு  தெரிந்தவர்கள் அதற்க்கு தேவையான Font install செய்து உபயோகிப்பார்கள். ஆனால் தெரியாதவர்கள் எப்படி உபயோகிப்பார்கள்?   அதற்கான தீர்வையும் Blogger கொடுத்துள்ளது.  அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Step 1

  1. முதலில்  WWW.BLOGGER.COM க்கு செல்லுங்கள்.
  2. SIGN IN  செய்துகொள்ளுங்கள்.

Step 2


  1. Settings பட்டன் அழுத்தவும் பிறகு 
  2. Language and formatting தேர்ந்தெடுக்கவும்.

Step 3

  1.  Enabled தேர்ந்தெடுக்கவும்
  2. Tamil - தமிழ் தேர்ந்தெடுக்கவும் 
  3. Save settings பட்டன் அழுத்தி மாற்றங்களை சேமிக்கவும். 

Step 4


பிறகு Posts 'ல்  New Post பட்டன் அழுத்தவும்.

Step 5



1.  அ  குறியீட்டை தேர்தெடுக்கவும். இதை அழுத்திய பிறகு நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் மாறிவிடும்.

2. உதாரணத்திற்கு நீங்கள் ammaa என்று தட்டச்சு செய்து ஒரு இடைவெளி ( Spacebar ) விட்டால் அம்மா என்று தமிழில் மாறிவிடும். இனி தடை இல்லாமல் தமிழில் வலைபதிவு ஆரம்பிக்கலாம்.


| Leave a Comment |

Recommended Post to Read :

No comments :

Post a Comment