Front end மற்றும் Back end Languages என்றால் என்ன?

வலைபதிவர்களுக்கு என்னால் முடிந்தவரை எனக்கு தெரிந்த நிரல்கள் பயன்படுத்தி Blogger Widget Design மாற்றம் செய்து வலைபதிவில் பயன்படுத்துவது எப்படி என்பதை பரிசோதித்து, வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன்.   சரி இந்த பதிவில் Front end language மற்றும் Back end language என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.





Front end Language என்றால் என்ன?
நம் வலைதளத்தின் பக்கங்களை பல வண்ணங்களில் மற்றும் பல வகையான கோணங்களில் மாற்றி வடிவமைப்பதற்க்காக பயன்படுத்தும் நிரல்களை Front end language என்கிறோம். இவைகளை நாம் திரையில் நேரடியாக கண் முன்னே காண்கிறோம் அதனால் இதற்க்கு Front end Language என்று பெயர். உதாரணத்திற்கு நம் வலைதளத்தின் பக்கங்கள் அனைத்தும் Front end Language ஐ கொண்டு உருவாக்கப்பட்டது.

Front end Language உதாரணம்:-

  • Html
  • Java Script
  • Css
  • etc,.
Back end Language என்றால் என்ன?
நம் வலைதளத்தில் Login Page இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதில் நமது பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து Login பட்டன் அழுத்தியவுடன் Database ல் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் சரியாக இருக்கிறதா இல்லையா என சரி பார்த்து, சரியாக இருந்தால் உங்களை மேலே தொடர அனுமதிக்கும். சரியாக இல்லை என்றால் உங்களை மேலே தொடர அனுமதிக்காது. இது போல் நம் திரைக்குப் பின்னே வேலையை செய்வது நமக்கு பதில் தருவது Back end Language ஆகும்.

Back end Languageஉதாரணம்:-

  • Php 
  • Java 
  • C
  • etc,.


| Leave a Comment |

Recommended Post to Read :

No comments :

Post a Comment