METATAG மிக அவசியம் ஏன்? அதை வலைபதிவில் இணைப்பது எப்படி?

நமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டிகள் வழியாக வரலாம்.  ஆனால் விளம்பரங்கள் மற்றும் திரட்டிகளினால் வரும் வாசகர்களால் நமது வலைபதிவின் தரவரிசை உயராது.  Google போன்ற தேடுபொறி வழியாக அதிக வாசகர்கள் வந்தால்தான் நமது வலைபதிவின் தரவரிசை உயரும்.  தேடுபொறிகளில் இணைத்து அதிக வாசகர்களை பெற நமது வலைபதிவில்  Meta tag அவசியம் இணைக்க வேண்டும்.   Meta tag  இணைத்தால்தான் நம்முடைய பதிவுகளை தேடுபொறிகள் எடுத்து பட்டியலிட்டு காட்டும். இதை எப்படி இணைப்பது என பார்க்கலாம்.

Step 1

  1. முதலில்  WWW.BLOGGER.COM 'ல் SIGN IN  செய்துகொள்ளுங்கள்.
  2. பாதுகாப்பிற்க்கு Theme Backup எடுத்துகொள்ளுங்கள்.   தெரியவில்லையென்றால் இந்த பதிவை பார்க்கவும்.

Step 2


Theme ==>  Edit HTML பட்டன் அழுத்துங்கள். பிறகு வரும் பக்கத்தில்

( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

<b:skin>

கண்டுபிடித்த கோடிங்கின் மேலே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை Copy and Paste செய்யுங்கள். 

<b:include data='blog' name='all-head-content'/>
<title><data:blog.pageTitle/></title><b:else/><title><data:blog.pageName/></title></b:if>
<meta content='YOUR DESCRIPTION HERE' name='description'/>
<meta content='YOUR KEYWORDS HERE' name='keywords'/>
<meta content='http://YORU BLOG/SITE ADDRESS/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளதுதான் நமது TITLE TAG இது மிக அதிக வாசகர்கள் வருவதற்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலே நீல வண்ணத்தில் உள்ள YOUR DESCRIPTION HERE என்ற இடத்தில் உங்கள் வலைபதிவிவை பற்றி ஒரு வரியில் DESCRIPTION சேர்த்துக் கொள்ளுங்கள்

மேலே நீல வண்ணத்தில் உள்ள YOUR KEYWORDS HERE என்ற இடத்தில் உங்கள் வலைபதிவிற்கு சம்பந்தமான சில சொற்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

YOUR DESCRIPTION HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

 <meta content='நம் திறமைகளை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் உலகில் உள்ள அனைவரிடமும் பகிர்த்துகொள் உதவுவதுதான் வலைபதிவு' name='description' />

YOUR KEYWORDS HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='கம்ப்யூட்டர், பிளாக்கர், tips, Computer, Share, blogger, widget' name='keywords'/>

 YORU BLOG/SITE ADDRESS என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='http://techfromtn.blogspot.in/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.


| 1 comment |

Recommended Post to Read :

1 comment :

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete