வலைப்பதிவின் Pages, Posts & Comments ஐ Backup & Restore செய்வது எப்படி?


சென்ற பதிவில் வலைபதிவு / Blog எழுதுவது எப்படி என்பதை பார்த்தோம். அதை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவில் வலைப்பதிவின் பக்கங்கள், பதிவுகள் மற்றும் கருத்துரைகளை Backup எடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம். நாம் பிளாக் ஆரம்பித்து நடத்திவரும் போது நமது Gmail Account திருடப்பட்டாலோ அல்லது பிளாக்கரில் சிறிய பிரச்சனை ஏற்ப்பட்டுவிட்டது என Google கை விரித்துவிட்டால்?  இன்னும் பல காரணங்கள் உள்ளது.   நாம் இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிளாக் ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.  அதற்காகதான் முன் ஜாக்கிரதையாக Backup எடுத்துவைப்பது சிறந்தது. சரி பதிவிற்கு வருவோம்.

Step 1

  1. முதலில்  WWW.BLOGGER.COM க்கு செல்லுங்கள்.
  2. SIGN IN  செய்துகொள்ளுங்கள்.

Step 2


Settings ==>Other ==> Back up Content பட்டன் அழுத்தினால் உங்களுக்கு ஒரு கீழே உள்ளது போல் ஒரு Window திறக்கும்.


Step 3

Save to your Computer பட்டன் அழுத்தி தரவிறக்கம் செய்யப்பட்ட File ஐ பாதுகாப்பாக சேமித்துக்கொள்ளலாம்.



Step 4

 மீண்டும் பதிவேற்ற Settings ==> Other ==> Import Content பட்டன் அழுத்தவும்.

Step 5

1. நீங்கள் பதிவேற்றிய பதிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றால் டிக் மார்க் இருக்க வேண்டும். வேண்டாம் என்றால் டிக் மார்க் எடுத்துவிடவும்.

2. Import from computer பட்டன் அழுத்தி செமித்துவைதிருக்கும் Backup file ஐ தேர்ந்தெடுக்கவும்.



| Leave a Comment |

Recommended Post to Read :

No comments :

Post a Comment