வலைப்பதிவின் Theme & Widget ஐ Backup & Restore செய்வது எப்படி?

சென்ற பதிவில் வலைப்பதிவின் Pages, Posts & Comments ஐ Backup & Restore செய்வது எப்படி என்பதை பார்த்தோம்.  அதை படிக்க இங்கே செல்லவும்.

இந்த பதிவில் வலைப்பதிவின் Template ஐ Backup & Restore செய்வது எப்படி என்பதை விளக்கமாக பார்க்கலாம்.  சில பதிவர்களுக்கு மற்ற வலைப்பதிவை விட நமது வலைபதிவு அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அவர்கள் அடிக்கடி தங்கள் இஷ்டபடி Template ஐ மாற்றி அமைத்துகொண்டே இருப்பார்கள்.  அப்படி செய்யும் பொது எதாவது சிறு தவறு செய்தாலும் கஷ்டப்பட்டு உருவாக்கிய Template முழுவதுமாக இழக்க நேரிடும்.  அந்த சமயங்களில் நாம் Template Backup எடுத்து வைத்திருந்தால் சுலபமாக பதிவேற்றிக்கொள்ளலாம்.  சரி பதிவிற்கு வருவோம்.

Theme Backup எடுப்பது எப்படி?

Step 1

  1. முதலில்  WWW.BLOGGER.COM க்கு செல்லுங்கள்.
  2. SIGN IN  செய்துகொள்ளுங்கள்.

Step 2


Theme ==> Backup/Restore பட்டன் அழுத்தினால் Step 3 ல் படத்தில் உள்ளது போல் தோன்றும் .

Step 3


Download Theme என்பதை தேர்வுசெய்தால் நம்முடைய Theme Download ஆகும்.  பாதுகாப்பாக சேமித்துக்கொள்ளுங்கள்.

Step 4

Theme Restore செய்வது எப்படி?


Theme ==> Backup/Restore==> Choose File பட்டன் அழுத்தி நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் Theme Backup ஐ தேர்ந்தெடுங்கள் பிறகு Upload பட்டன் அழுத்தி Restore செய்து கொள்ளலாம்.

இதில் Widgets 'களும் சேர்த்து Backup  எடுக்கப்படும்.  ஆனால் சில சமயங்களில் Widgets 'களில் Error செய்தி காட்டும் அதனால் இதை தனியாக Backup எடுத்துக் கொள்ளுங்கள்.

Step 5

Widget Backup எடுப்பது எப்படி?


Layout தேர்ந்தெடுத்து எந்த எந்த Widget ஐ Backup எடுக்க வேண்டுமோ அதன் வலதுபக்கத்தில் இருக்கும் Edit பட்டன் அழுத்தி வரும் Window வில் உங்களுடைய Widget Code இருக்கும் அதை Copy செய்து Microsoft word அல்லது Notepad ல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

வலைபதிவில்  Default ஆக வரும் Widgets 'களை Backup எடுக்க தேவையில்லை.


| Leave a Comment |

Recommended Post to Read :

No comments :

Post a Comment